கோவில் கழிவறையில் பிணமாக கிடந்த ஆண் சிசு

கோவில் கழிவறையில் பிணமாக கிடந்த ஆண் சிசு.

Update: 2021-03-30 18:01 GMT
பிணமாக கிடந்த ஆண் சிசு
கோவை,

கோவை ஈச்சனாரி கோவிலில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய நேற்று காலை தூய்மை பணியாளர்கள் வந்து கதவை திறந்து சுத்தம் செய்தனர்.

 அப்போது கழிவறைக்குள் 6 மாத ஆண் சிசு பிணம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் கோவில் செயல் அலுவலரிடம் தெரிவித்தனர். 

இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விரைந்து வந்து சிசுவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.

 இதையடுத்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சிசுவை கழிவறையில் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்