கோவையில் 207 பேருக்கு கொரோனா தொற்று

கோவையில் 207 பேருக்கு கொரோனா தொற்று.;

Update: 2021-03-30 17:44 GMT
கொரோனா
கோவை,

கோவை மாவட்டத்தில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 679 ஆக உயர்ந்து உள்ளது. 

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயது பெண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது முதியவர் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இவர்களுடன் சேர்த்து இதுவரை 693 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். 


அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 109 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 56 ஆயிரத்து 599 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,387 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 5,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

இவர்களுடன் சேர்த்து இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்