2 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போட்டனர்

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் தபால் வாக்கு அளித்தனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

Update: 2021-03-30 17:24 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் தபால் வாக்கு அளித்தனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

தபால் ஓட்டு

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போலீசார் அனைவரும் ஒரே நாளில் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்தார்.
அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு அந்தந்த ஊர்களில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது."

கலெக்டர் பார்வையிட்டார்

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், போலீசாருக்கு தபால் வாக்கு அளிப்பதற்காக படிவங்கள் தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி வழங்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் தேர்தல் வகுப்பு நடக்கும் இடத்தில் அலுவலர்கள் தபால் வாக்கு அளித்து வருகின்றனர். போலீசார் வாக்களிக்க அந்தந்த தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்த 735 போலீசார் தபால் ஓட்டு போட்டனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு காரைக்குடியில் எல்.சி.டி.பழனியப்பா செட்டியார் கலையரங்கில் விண்ணப்பித்த 351 போலீசார் தபால் ஓட்டு போட்டனர்.

2 ஆயிரம் போலீசார்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திருப்பத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 156 போலீசார் தபால் ஓட்டும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 711 போலீசாரும் தபால் வாக்கு அளித்தனர். இது தவிர வெளிமாவட்டத்தில் இருந்து இங்கு பணிபுரியும் 474 போலீசார் அந்தந்த தொகுதிகளுக்கு அஞ்சல்வழியாக தபால் ஓட்டு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் 2 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போட்டு உள்ளனர்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தா்மலிங்கம், தாசில்தார் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்