மலையாண்டி சுவாமி ஊர்வலம்

பொன்-புதுப்பட்டியில் மலையாண்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-03-30 17:17 GMT
பொன்னமராவதி, மார்ச்.31-
பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு மலையாண்டி சுவாமி, சுப்பிரமணிய சுவாமி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மலையாண்டி கோவிலிலிருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டு ராமாயணம் மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்பு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின் ராமாயணம் மடத்திலிருந்து பொன்னமராவதி காந்திசிலை, அண்ணா சாலை, பஸ் நிலையம் வழியாக மீண்டும் மலையாண்டி கோவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து  இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்