சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை ஆலடியார் வீதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 43). வெளியூர் சென்றிருந்த இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்