திருக்கோவிலூரில் வருகிற 3-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம்
திருக்கோவிலூரில் வருகிற 3-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம்
திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எல்.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க.,அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களாக பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போட்டியிடும் தே.மு.தி.க., அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் வகையில் வருகிற 3-ந் தேதி மாலை 6 மணி அளவில் திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் தமது கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு திரட்டுகிறார்.
எனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந் திரளாக திருக்கோவிலூருக்கு வருகை தந்து விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மேலும் திருக்கோவிலூர் வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை வரவேற்கும் வகையில் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.