ஜல்லிக்கட்டு உரிமையை பெற்றுத்தந்துவழக்கை தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு - அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் பேச்சு

ஜல்லிக்கட்டு உரிமையை பெற்றுத்தந்து வழக்கை தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு என அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் பேசினார்.

Update: 2021-03-30 18:30 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அலங்காநல்லூர் பேரூர் கேட்டுகடை, ஜல்லிகட்டு வாடிவாசல், தெப்பகுளம், பஸ்நிலையம், வலசை, நெடுங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் வாக்குசேகரித்தார். அவருக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் திறந்த ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அரசு சர்க்கரை ஆலை இயக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல் ஆட்சிக்கு வந்தது அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

உடன், ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன், பேரூர்செயலாளர் அழகுராஜா, முன்னாள் சேர்மன் ராம்குமார், கூட்டுறவு சங்க தலைவர் பாலாஜி, பாசறை மாவட்ட இணைசெயலாளர் உமேஷ்சந்தர், நாட்டாமை சுந்தர், சுந்தரராகவன், விவசாய அணி மாவட்ட இணைசெயலாளர் வாவிட மருதுலீர்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, ஆறுமுகம், தாமரை, அழகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்