உடன்குடி தண்டுபத்திலுள்ள தி.மு.க. அலுவலகத்தில் பறக்கும் படையினர் சோதனை

உடன்குடி தண்டுபத்திலுள்ள தி.மு.க. அலுவலகத்தில் பறக்கும் படையினர் நேற்று திடீரென்று சோதனை நடத்தினர்.

Update: 2021-03-30 15:42 GMT
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ரகசிய கூட்டங்கள் நடப்பதாகவும், ரகசியமாக பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார் கூறியுள்ளனர். இதை அடுத்து திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படைகுழுவினர் திடீரென நேற்று இரவு தண்டு பத்தில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு திடீர் சோதனை நடத்தினர். மேலும் தி.மு.க. அலுவலகத்தில் அருகிலுள்ள  விவசாய பால்பண்ணையிலும் சோதனையிட்டனர். அங்கிருந்து பறக்கும் படையினர் எதையும் கைப்பற்றவில்லை. இதுகுறித்து பறக்கும் படையினர் கூறுகையில்,‘ தண்டுபத்து தி.மு.க. அலுவலகத்தின் அருகிலுள்ள விவசாய பால்பண்ணையில் ரகசிய கூட்டம் நடப்பதாகவும், பணம் பட்டுவாடா செய்வதாகவும் எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தினோம்.இங்கு அப்படி எந்தவிதமான கூட்டம் நடைபெறவில்லை. எந்த பொருளையும் கைப்பற்றவில்லை. இதுபற்றி நாங்கள் மேலிடத்திற்கு தகவல் கொடுத்து விட்டோம’் என்று கூறினர்

மேலும் செய்திகள்