பெரியகோட்டைப்பகுதியில் குளிர்சாதன வசதியோடு காய்கறி சேமிப்பு கிடங்கு அமைப்பேன் - அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி பிரச்சாரம்

பெரியகோட்டைப்பகுதியில் குளிர்சாதன வசதியோடு காய்கறி சேமிப்பு கிடங்கு அமைப்பேன் என கூறி அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி பிரச்சாரம் செய்தார்.;

Update: 2021-03-30 18:30 GMT
காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத் தில் பெரியகோட்டை. சோழங் காடு, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். செல்லும் இடங்களில் வேட்பாளர் தேர்போகி வே.பாண்டிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்து ஆதரவை தெரிவித்தனர். பெரியகோட்டை பகுதி மக்கள் வேட்பாளரிடம் இங்கு பெரும்பிடுகு முத்தரையர் சிலை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி பெற்ற வுடன் இதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சாக இறங்கி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

பின்னர் வேட்பாளர் பாண்டி பிரச்சாரத்தில் பேசுகையில், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கல்வி மருத்துவம் போன்ற  வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்துவேன். இப்பகுதியில் காய்கறி விளைச்சல் அதிகம் இருப்பதால் இங்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய காய்கறி சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மல்லிகை விளைச்சல் அதிகம் இருப்பதால் இவற்றை கவனத்தில் கொண்டு மல்லிகை வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்வேன். செட்டிநாடு பாரம்பரிய உணவு மற்றும் தின்பண்டங்களை பிரபலப்படுத்த சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்துவேன். ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் நகர அளவில் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இயற்கை வளங்கள் பாதுகாக் கப்படும். எளியவர்கள் நலன்காக் கப்படும். உள் கட்டமைப்பு வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். ஆன்மீகத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், மக்கள் விரும்பாத இடங்களில் செயல்படும் மதுக்கடைகள் அகற்றப்படும். 

கிராமம் தோறும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல மருத்துவமனைகள் உதவியோடு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். விவசாயம், தொழில் இரண்டையும் உள்ளடக்கிய நவீன தற்சார்பு பொருளாதார அடிப்படையில் அந்தந்த பகுதியில் கிடைக்கின்ற மூலப்பொருட்களைக் கொண்டு ஒருங்கிணைந்த தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.தொகுதியில் தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கப்படும். விவசாயம் தொழில் அல்ல, வாழ்க்கை முறை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விவசாயியும் நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்படுவேன் இவ்வாறு பேசினார். பிரச்சாரத்தில் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, பழங்குடியினர் கூட்ட மைப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்