அ.தி.மு க ஆட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது

கிணத்துக்கடவு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக செ.தாமோதரன் போட்டியிடுகிறார்.

Update: 2021-03-30 18:30 GMT
கிணத்துக்கடவு, 

அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் செ.தாமோதரன் நேற்று மலுமிச்சம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணிகண்டபுரம், எம்.ஜி.ஆர் நகர், கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணசாமிபுரம், தேரோடும் வீதி ,மதுரை வீரன் தெரு, ஆர்.எஸ் ரோடு, 5- வது வார்டு பேரூராட்சி அலுவலகம் வீதி, பெரியார் நகர் காமராஜ் காலனி சிங்காரம் பாளையம், புது காலனி, கல்லாங்காட்டு புதூர், அண்ணா நகர், பகவதி பாளையம், நம்பர் 10 முத்தூர், சங்கராபுரம், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் செ.தாமோதரனுக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்து , ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடத்தில் வேட்பாளர் செ.தாமோதரன் பேசியதாவது: - 

நான் 3 முறை கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ வாக பணியாற்றிய காலத்தில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். அப்போதுதான் கிணத்துக்கடவில் பஸ்நிலையம் கட்டப்பட்டது. கூடுதலாக பள்ளிகட்டிடங்கள், சாலை வசதி ,வடிகால் வசதி என எண்ணற்ற பல திட்டங்கள் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு கிடைத்துள்ளது. அ.தி.மு க ஆட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளது . கிணத்துக்கடவு தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது . தக்காளிவிலை வீழ்ச்சியடையும் காலங்களில் தக்காளிகளை பாதுகாக்க கிணத்துக்கடவில் குளிர்பதனகிடங்கு அமைக்கப்பட்டது . தற்போது கிணத்துக்கடவில் தீயணைப்பு நிலையம்கொண்டுவரப்பட்டுள்ளது . நீங்கள் மீண்டும் என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம்புதியகட்டிடத்தில்செயல்படவும்,கிணத்துக்கடவு தாலுகாவிற்க்குதேவையான அனைத்து அரசு அலுவலகங்களும் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் ஏராளமான கல்உடைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நலவாரியம் தொடங்கவும் நடவடிக்கை எடுப்பேன். கோவை-பொள்ளாச்சி இடையே போக்குவரத்துநெரிசலை கட்டுப்படுத்த கோவை -பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டது. 

அ.தி.மு.க ஆட்சியில் கிராமங்கள் முதல் நகரம் வரை உள்ள அனைத்து சாலைகளும் தரம் உயர்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைத்திடவும் தமிழகம் வளர்ச்சி காண பொதுமக்கள் அனைவரும் மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் தொடர அனைவரும் வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு என்றார். 

இந்த பிரச்சாரத்தில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை .சண்முகம, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ் குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் ,கிணத்துக்கடவு பேரூராட்சி கழக செயலாளர் மூர்த்தி ,அ.தி.மு.க நிர்வாகிகள்மனோகரன்,கண்ணம்மாள் , டி.எல்.சிங், பிரபு உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்