ராதாபுரம் தொகுதி ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை சிறப்பு பிரார்த்தனை

ராதாபுரம் தொகுதி ஆத்தங்கரை பள்ளிவாசலில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

Update: 2021-03-30 18:30 GMT
ராதாபுரம்,

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அவர் நேற்று ராதாபுரம் மேற்கு ஒன்றிய பகுதிகளான கூத்தங்குழி, உலக ரட்சகபுரம், கணக்கன்குளம், திருவம்பலாபுரம், பார்க்கனேரி மேலூர், கீழுர் காமராஜ் நகர், ஆத்தங்கரை பள்ளிவாசல், சங்கனாபுரம், தோட்டாவிளை, முருகானந்தபுரம், தொப்புவிளை, ஆந்திரா குடியிருப்பு, சூடுஉயர்ந்தான் விளை, ராமன்குடி, தெற்கு புலிமான்குளம், ராஜம்மாள்புரம், புலியமான்குளம், ஆவுடையாள்புரம், சொக்கலிங்கபுரம், ஜார்ஜியார் நகர், மிக்கேல் நகர், தொப்புவிளை, குட்டம், ஆதித்தனார் நகர், குஞ்சன்விளை, கூடுதாழை, பத்மநாதபுரம், வெம்மணங்குடி, டாட்டா நகர், கூட்டப்பனை, அண்ணா நகர், உவரி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்ற வேட்பாளர் இன்பதுரை மலர் போர்வை அணிவித்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
பிரசாரத்தின்போது வேட்பாளர் இன்பதுரை பேசுகையில், ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். தி.மு.க.வினர் பொய்யை சொல்லி வாக்கு கேட்கின்றனர். கொரோனா காலத்தில் மக்களை சந்திக்க வராதவர்கள் ஓட்டு வாங்க மட்டும் ஓடோடி வரலாமா? அ.தி.மு.க. அரசின்  சாதனைகளை எண்ணிப்பார்த்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்றார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ், நிர்வாகிகள் பவர் சிங், பா.ஜனதா ஒன்றிய தலைவர் உவரி ராஜன், கிருபாநிதி ராஜன், உவரி ரமேஷ், செய்யது, நவீன், சூசைவியாகுலம் வினிஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்