கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோவிலில் வருசாபிஷேகம்
கோவில்பட்டி கதிர்வேல் முருகன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியி வீரவாஞ்ஜி நகர் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் 15-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம், கணபதி ஹோமம், சண்முகர் காயத்ரி, மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவர் கதிர்வேல் விமான அபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவருக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமேதா, செயல் அலுவலர் (பொறுப்பு) சிவகலை பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.