சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத் தலைவர் டி.எம்.என் தீபக் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை,
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ தேர்தல் களத்தில் மிகவும் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத் தலைவர் டி.எம்.என் தீபக் தலைமையில் அதன் நிர்வாகிகள் மூன்றாயிரம் பேர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது டி.எம்.என் தீபக் கூறுகையில் ,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நடத்திய போராட்டத்தில் மா சுப்பிரமணியன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார், அதனால் நாங்கள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தோம்.கொரோனா காலத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளி இயக்கங்களுக்கு தலா 25 கிலோ அரிசி ,40 ஆயிரம் மாஸ்க் உள்ளிட்டவற்றை வழங்கினார். எனவே எங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த தேர்தலில் நாங்கள் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர். தொடர்ந்து மா.சுப்பிரமணியன் தொகுதி முழுவதும்
பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்று எங்கள் வாக்கு திமுக தான் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று கூறி சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.
மேலும் 171 வது வார்டில் நடைபயிற்சி சென்றவர்களிடமும், தாடண்டர் நகர் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் புதியதாக உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு தேவையான உடற்பயிற்சி கருவிகளையும் மா.சுப்பிரமணியன் வழங்கி உள்ளார். அதை மறக்காத சைதாப்பேட்டை தொகுதி இளைஞர்கள் தங்கள் வாக்குகள் அனைத்தும் உங்களுக்கு தான் என்று மா சுப்பிரமணியனிடம் வாக்குறுதி அளித்தனர். மேலும் சிஐடி நகர், கிழக்கு ஜோன்ஸ் சாலை , கஸ்தூரிபாய் தெரு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, ராஜபாளையம் பேன் பேட்டை, ஜோதியம்மாள் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் நடந்தே சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திமுக மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மதிமுக மாவட்டச் செயலாளர் கோதண்டம், எம் நாகா, சைதை சாதிக், பாலசுந்தரம், அஞ்சல் என் .ராமன் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.