துறையூர் தொகுதி மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் - அ.தி.மு.க.வேட்பாளர் இந்திராகாந்தி உறுதி

துறையூர் தொகுதி மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அ.தி.மு.க.வேட்பாளர் இந்திராகாந்தி உறுதி அளித்தார்.

Update: 2021-03-30 10:08 GMT
துறையூர், 

துறையூர் தொகுதி  அ.தி.மு.க.வேட்பாளர் இந்திராகாந்தி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, அவர் பச்சை மலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி, புத்தூர், கருங்காடு, நச்சிலிப்பட்டி, சோளமாத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அப்போது, அவர் கல்லூரி மாணவிகளிடம் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி  இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். மேலும், அவர் மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, பஸ் வசதி, ரேஷன் கடைகள், நடமாடும் மருந்தகம் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படும் என்று உறுதி அளித்தார். 

அப்போது, ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், வெங்கடேசன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அழகாபுரி செல்வராஜ், ராம் மோகன், டாப் செங்காட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சரத்குமார், முன்னாள் தலைவர் மனோகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், வழக்கறிஞர் செந்தில் குமார், அத்தியப்பன், ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்