ஜோலார்பேட்டை அருகே கோலம்போட சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே கோலம்போட சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூராகவன். இவரது மனைவி பானுமதி (வயது 45). பூராகவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பானுமதி தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலையில் பானுமதி வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக அதிகாலை 5 மணி அளவில் எழுந்து சாணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ஒருவர் மட்டும் இருந்து இறங்கி வந்து பானுமதியிடம் பேச்சு கொடுப்பது போல் நடித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து ம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.