100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலி குடங்கள் மேல் அமர்ந்து பத்மாசனம் செய்த சிறுவன்

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலி குடங்கள் மேல் அமர்ந்து பத்மாசனம் செய்த சிறுவன்

Update: 2021-03-30 09:10 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் தீப மலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் யோகாசன நிகழ்ச்சியை நேற்று திருவண்ணாமலையில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஹரி கோவிந்தன் வரவேற்றார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தலைமை தாங்கினார்.

 நிகழ்ச்சியில் 5 வயது தர்ஷன் என்ற சிறுவன் இரண்டு காலி குடங்களை் ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்து அதன் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினான். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி கலந்துகொண்டு சிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கினார். மேலும் இச்சிறுவன் தக்காளிகள் மேல் அமர்ந்து பத்மாசனம் உள்ளிட்ட 21 ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்