துடியலூர் அருகே அனுமதியின்றி பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

துடியலூர் அருகே அனுமதியின்றி பிரசாரத்துக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-30 06:27 GMT
துடியலூர்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியில் கட்சியின் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சின்னதடாகம் பகுதியில் வாகனத்துக்கு அனுமதி பெறாமல் தி.மு.க. சார்பில் பிரசாரம் செய்து கொண்டு இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் கொடுத்த புகாரின் பேரில் தடாகம் போலீசார் தி.மு.க. பிரசார வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பிரசார வாகனத்தை ஓட்டி வந்த கோவை சித்ரா பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 38) என்பவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்