காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று

காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-30 01:03 GMT
காஞ்சீபுரம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ்துறை சார்பில் பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷியாம் சுந்தர் நியமிக்கப்பட்டிருந்தார்.

காஞ்சீபுரம் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

கொரோனா தொற்று

இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தங்கியிருந்த சுற் றுலா மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்