சேலம் பெரியார் மேம்பாலத்தில் பஸ் மோதி வாலிபர் பலி

பஸ் மோதி வாலிபர் பலி

Update: 2021-03-29 23:31 GMT
சேலம்:
சேலம் பெரியார் மேம்பாலத்தில் பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சோபா தயாரிக்கும் நிறுவனம்
சேலம் குகை புலிக்குத்தி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). இவர் சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று மதியம் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலத்தில் வந்தபோது தின்னம்பட்டியில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த தனியார் பஸ் ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராஜ்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
,,,,,,,

மேலும் செய்திகள்