பழனி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல்
பழனி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீரனூர்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பழனி அருகே தெப்பம்பட்டியில் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், ரூ.25 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.
வேனில் வந்தவர்களிடம் இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.25 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.