வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-03-29 19:51 GMT
மானூர்:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வல்லவன் கோட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் வினோத்குமார் (வயது 27). இவர்  தனது மோட்டார் சைக்கிளில் மானூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

கரம்பை அருகே வந்த போது, எதிரே நெல்லை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த ராமர் (59) என்பவர் காரில் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் வினோத்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.  அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இப்ராகிம் மகன் முகமது அசாருதீன் (21). இவர் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். 

சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை- புதிய பஸ் நிலையம் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அசாருதீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்