நொய்யல்
நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் கணபதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.