ரூ.11¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிதம்பரத்தில் ரூ.11¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-29 19:43 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் சிதம்பரம் கொத்தவால் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினர். அப்போது மளிகைக்கடையின் மாடியில் உள்ள குடோனில் விற்பனைக்காக குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் மான்சிங் (வயது 40) மற்றும் கடை ஊழியர்கள் முகன்சிங் (42), சஞ்சய் சிங் (20), அசோக்சிங் (20) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர். 

மேலும் செய்திகள்