திருச்சி மாவட்டத்தில் தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2021-03-29 19:34 GMT
திருச்சி, மார்ச். 30-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தொடக்கத்தில் தினமும் 10 முதல் 15 வரை கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் வார இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-க்கு மேல் தாண்டியது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 என இருந்த நிலையில் நேற்று 58 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று மட்டும் 10 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்