1,185 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராவுக்கு ஏற்பாடு

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,185 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-03-29 19:18 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,185 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 வாக்குச்சாவடிகள்
 மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு தற்போது 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
 இந்த வாக்குச்சாவடிகளில் 201 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
 கண்காணிப்பு கேமரா
 மேலும் கடந்த தேர்தல்களில் 75 சதவீத வாக்காளர்களுக்கு மேல் ஒரே வேட்பாளருக்கு வாக்கு பதிவான வாக்குச்சாவடிகளும் கணக்கில் எடுக்கப்பட்டு மொத்தம் 1,185 வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 7 சட்டமன்றத்தொகுதிகளிலும் 1,185 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைகேடு 
 இதன் மூலம் இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.  முறைகேடுகளை தவிர்க்கவும், பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்