ரூ.81 ஆயிரம் திருட்டு

கடையை உடைத்து ரூ.81 ஆயிரம் திருட்டு நடந்துள்ளது.

Update: 2021-03-29 19:18 GMT
மதுரை, 
மதுரை புதூர் பாரதியார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிரத்னம் (வயது 29). இவர் எஸ்.எஸ்.காலனி ராம் நகரில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோவில் வைத்திருந்த 81 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்