தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருத்தங்கல் அருகே தூக்குப்போட்டு ெபண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-03-29 18:51 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. துப்புரவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 28). 2 குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்