குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Update: 2021-03-29 18:51 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சின்னையா (வயது 22). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர், திருக்கோகர்ணம் அருகே வெள்ளை கோனப்பட்டி பகுதியில் ஒரு குளத்தில் சம்பவத்தன்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளத்தில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்