‘ஆடியோ வாய்ஸ்’ அனுப்பி விட்டு மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி
பேரணாம்பட்டு அருகே மாயமான செங்கல் சூளை தொழிலாளி ‘ஆடியோ வாய்ஸ்’ அனுப்பிவிட்டு மரத்தில் பிணமாக ெதாங்கினார். அவரது சாவுக்கு காரணமான 3 பேரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே மாயமான செங்கல் சூளை தொழிலாளி ‘ஆடியோ வாய்ஸ்’ அனுப்பிவிட்டு மரத்தில் பிணமாக ெதாங்கினார். அவரது சாவுக்கு காரணமான 3 பேரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல் அறுக்கும் தொழிலாளி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 40). செங்கல் அறுக்கும் தொழிலாளி இவர் கடந்த 2-ந் தேதியன்று வீட்டிலிருந்து திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் அது குறித்து சுகுமாரின் மனைவி ஏஞ்சலின் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான சுகுமார் நேற்று முன் தினம் அவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள மலைப்பகுதியில் புளிய மரத்தில் பிணமாக தொங்கினார். தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விசாரணை நடத்தி சுகுமாரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
‘ஆடியோ வாய்ஸ்’
கடந்த பிப்ரவரி மாதம் சுகுமாரின் அண்ணன் சுதாகரின் மகன் சுனில், கோக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாகவும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிைடயே கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த 3 பேர் சுகுமாரிடம் காணாமல் போன மாணவியை ஒப்படைக்கும்படி கேட்டு தன்னை பயமுறுத்தி அடிக்கடி டார்ச்சர் செய்து மிரட்டி வந்ததாகவும் அதனால் உங்களையெல்லாம் விட்டு பிரிந்து செல்கிறேன், தேட வேண்டாம் என்றும் மேற்கண்ட 3 பேர் தான் தனது சாவுக்கு காரணம் கூறி சுகுமார் தனது தங்கை மகன் மகேஷிற்கு செல்போனில் ‘ஆடியோ வாய்ஸ்’ பதிவில் பேசியுள்ளார்
எனவே சுகுமாரின் சாவுக்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை சுகுமாரின் மனைவி ஏஞ்சலின் மற்றும் உறவினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ேடார் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆதாரத்துடன்...
போராட்டத்தில் ஈடுபட்ட சுகுமாரின் உறவினர்களிடம் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து புகாரை ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனை ஏற்று அவர்கள் புகார் அளித்தனர் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.