சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

முத்துப்பேட்டையில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தம்பியும் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-29 18:34 GMT
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தம்பியும் கைது செய்யப்பட்டார். 
மாணவி 
முத்துப்பேட்டையில் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 9-ந்தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் தனது மகளை பேட்டை மாதாகோவில்  கருவாட்டுவாடி பகுதியை சேர்ந்த அடைக்கலம் (24) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.
கடத்தல் 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  2 பேரையும் தேடிவந்தனர். இந்தநிலையில் இருவரும் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு  முத்துப்பேட்டைக்கு அழைத்து வந்த விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை அடைக்கலம் கடத்தியதும், இதற்கு அவரது தம்பி ரமேஷ்(20) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 
2 பேர் கைது 
இதையடுத்து அடைக்கலத்தை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேசையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை  அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்