மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி

தேனி அருகே மொபட் மீது கார் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

Update: 2021-03-29 17:50 GMT
தேனி:

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி மூனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. 

நேற்று முன்தினம் இரவு இவர் தனது மொபட்டில் கோடாங்கிபட்டி பள்ளிவாசல் அருகில் போடி-தேனி சாலையை கடக்க முயன்றார். 

அப்போது போடியில் இருந்து தேனி நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது. 

இதில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். 

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முருகனின் மகன் இலங்கேஸ்வரன் புகார் செய்தார். 

அதன்பேரில் கார் டிரைவரான பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்