கிருஷ்ணகிரியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.2.12 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் கார்களில் கொண்டு சென்ற ரூ.2.12 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-29 17:39 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு சாலையில் இருந்து பழையபேட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 200 கொண்டு சென்றது தெரிந்தது.

பணம் பறிமுதல்

இதேபோல் பெங்களூருவில் இருந்து நாமக்கலை நோக்கி சென்ற காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.59 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களிலும் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 700-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரான கற்பகவள்ளியிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்