தமிழக மக்கள் என்றுமே அ.தி.மு.க பக்கம் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் பேச்சு
தமிழக மக்கள் தி.மு.க வினரின் பொய்யான வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டார்கள் தமிழக மக்கள் என்றுமே அ.தி.மு.க பக்கம். கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன்பேச்சு.
கிணத்துக்கடவு,
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளராக செ.தாமோதரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர், மதுக்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீதிகளில் மாட்டுவண்டியில் சென்று வேட்பாளர் செ.தாமோதரன் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வேட்பாளர் செ.தாமோதரனுக்கு ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது பொதுமக்களிடம் வேட்பாளர் செ.தாமோதரன் பேசியதாவது:-
உங்களுக்கு ஏற்கனவேநான் அறிமுகமானவர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன்.நான் பணியாற்றிய 5 ஆண்டுகளில் 40 கோடி அளவிற்க்கு நிதி ஒதுக்கி கொடுத்துபவ்வேறு வளர்ச்சிபணிகளை வெள்ளலூர் பகுதியில் செய்துள்ளேன். வரும் தேர்தலில் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தால் இந்த பகுதிகளுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு எடுத்துச்சென்று உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றால் தேர்தல் அறிக்கையில்அறிவித்த அனைத்து திட்டங்களும் அனைத்து கிராம மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக இருக்கும் .நமது முதல்-அமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கிராமத்தில் இருந்து சென்றவர்.எனவே கிராமமக்களான் நிலையை நன்கு அறிந்தவர் அதனால்தான் கிராமமக்களுக்கும் ,கிராமங்களுக்கும் கூடுதல்நிதியை ஒதுக்கி கொடுத்து ஏராளமான வளர்ச்சி பணிசெய்துள்ளார்கள்.வெள்ளலூர்பகுதியில் குடிநீர் அதிகமாக கிடைக்க 2 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. .எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 20ஆண்டுகளாக உங்கள்பகுதிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி சென்றுள்ளனர் .அவர்களால் வெற்றுவாக்குறுதிகளைமட்டுமே தருவார்கள் .இந்த தொகுதியில் உள்ள எம்.பி பாராளுமன்ற தேர்தலின்போது ஏராளமானதள்ளுபடி திட்டத்தை தருவேன் என்றார்.இப்போது அவரே உங்களிடம் இருந்து தள்ளுபடியாகிவிட்டார் .திமுக தேர்தலைமுன்னிட்டு பொய்யான தேர்தல் அறிக்கைவிட்டு மக்களை ஏமாற்றபார்க்கிறது. தமிழக மக்கள் தி.மு.க வினரின் பொய்யான வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டார்கள் தமிழக மக்கள் என்றுமே அ.தி.மு.க பக்கம்என்றார்.
பிரச்சாரத்தில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ .எட்டிமடை சண்முகம் பேரூராட்சி கழகச்செயலாளர்கள் வெள்ளலூர் மருதாசலம், மதுக்கரை .சண்முகராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வசந்தராஜன், மாவட்ட துணைத்தலைவர் ரகு மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் ,வெள்ளலூர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் நாகராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணையன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.