பிரசாரத்தின் போது இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதியில் பிரசாரத்தின் போது இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Update: 2021-03-29 15:02 GMT
திருவெறும்பூர், 

திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்மலை பகுதியில் 32-வது வார்டு பொன்மலை ரெயில்வே மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேக ரித்தார். முன்னதாக தங்கம் வென்ற தடகள வீராங்கனை தனலட்சுமியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது அவர் பேசும் போது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய பெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம் பியன்ஷிப் போட்டிகள்கடந்த 15-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற் றது. இந்த தேசிய தடகள போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத் தில் 11.39 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமாதாஸ், டூட்டிசந்த் என இருபுகழ் பெற்ற வீரங்கனைகளையும் பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார் என்றார்.

பொன்மலையில் இளைஞர் களுடன் பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் 
குறிப்பிட்டுள்ளது போல ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ் நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும். எல்லா விளையாட்டிலும் சாதிக்க கூடிய விளை யாட்டு வீரர்களுக்கு சிறப்பு உயர்நிலை பயிற்சி, ஊக்கத் தொகை, போட்டிகளுக்கு சென்றுவர பயண செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அரசு வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு நிர் ணயம் செய்யப்படும். முழுமையாகச் செயல் படுத்தப்படுவதோடு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்த்து கொள்ளப்படும். விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கு பவர்களுக்கு பரிசுகளும், அரசு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப் படும். மேலும் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

உடன் பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ், வட்ட செயலாளர் வரதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கொட்டப்பட்டு ரமேஷ், இளைஞர் அணி பிரபா மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்