எட்டயபுரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா
எட்டயபுரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக கோவில்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சில தினங்காக காய்ச்சல் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்தார். இதனையடுத்து நேற்று மாலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடை அமைந்துள்ள தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் வெற்றி வேல்முருகன், சாத்தூரப்பன் மற்றும் பணியாளர்கள் மூலம் கிருமி நாசனி, லைசால் தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்