தமிழகத்தில் நாயுடு சமூகத்தினர் இன்றி அரசியல் இல்லை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேச்சு
தமிழகத்தில் நாயுடு சமூகம் இன்றி அரசியல் இல்லை என்று தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி,
நாயுடு மக்கள் நலச் சங்கம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும் அக் கட்சியின் முதன்மை செயலாள ருமான கே.என். நேருவுக்கு ஆதரவளிக்கும் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன் தலைமை தாங்கி னார். செயலாளர் ராஜாராம், பொருளாளர் வீரபாகு, அவைத்தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கத்தின் புரவலர்கள் பி.ஜி.பாலாஜி, கோவிந்த ராஜுலு, மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேருவுக்கு முழு ஆதரவு அளிப்பதை உறுதிப் படுத்தினர்.
திருச்சி மேற்கு தொகுதியில் மட்டும் 25 ஆயிரம் நாயுடு சமூகத்தினர் உள்ளனர். இதுபோல திருச்சி மாவட்டத் தில் உள்ள இதர தொகுதியிலும் உள்ளனர். எனவே, நாயுடு சமூக மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். திருச்சியில் 15 ஆண்டுக்கு முன்பு கோவிந்தராஜூலு சாதாரண வியாபாரிதான். ஆனால், தி.மு.க. இருப்பதி னாலேயே ஒரு வணிகர் சங்கத் துக்கு மாநில பொதுச்செயலாளர் ஆகி அடையாளம் காணப் பட்டார். நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கு என்றும் உறு துணையாக இருப்பேன். தெலுங்கு பேசுகிறவர்கள் இல்லையென்றால் எந்த ஆட்சியும் அமைக்க முடியாது. எனவே, உங்கள் ஆதரவை எனக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு ஆதரவளித்து ஸ்டாலின் முதல்-&அமைச்சர் ஆக துணை யாக நாயுடு சமூகத்தினர் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.