ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படும் முசிறி தொகுதி வேட்பாளர் செல்வராசு வாக்கு சேகரிப்பு

நாகையநல்லூர், முள்ளிப்பாடி, சிட்டிலரை உள்ளிட்ட ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படும் முசிறி தொகுதி வேட்பாளர் செல்வராசு வாக்கு சேகரிப்பு.

Update: 2021-03-29 13:43 GMT
முசிறி, 

முசிறி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும்  அம்மா பேரவை மாநில இணை செயலாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. முசிறி, தொட்டியம், தா.பேட்டை உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் முசிறி தொகுதியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்து பணிகள் நடைபெற்றுள்ளன. 8 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நமது பகுதி விவசாயம் சார்ந்தது. காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைத்து தண்ணீர் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.

நாகையநல்லூர், முள்ளிப்பாடி, சிட்டிலரை உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படும். முசிறி, தொட்டியம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் தரம் 
உயர்த்தி உயரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்