கரூர் தொகுதியில் 5 இடங்களில் மு.க.ஸ்டாலின் பெயரில் இலவச திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் வி. செந்தில் பாலாஜி வாக்குறுதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் தொகு தியில் 5 இடங்களில் மு.க.ஸ்டாலின் பெயரில் இலவச திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என வி.செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.;

Update: 2021-03-29 13:07 GMT
கரூர், 

கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்  வி.செந்தில் பாலாஜி கரூர் வடக்கு நகரத்திற்கு உட்பட்ட 5, 6, 10-வது வார்டு மற்றும் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் ஏழை,எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்க மேடு, தான்தோன்றிமலை, கரூர், வெண்ணைமலை, கோதூர் ஆகிய 5 பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய மு.க.ஸ்டாலின் இலவச திருமண மண்டபங் களை 5 வருடங்களுக்குள் கட்டி முடிப்பேன். வாங்கல் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். கரூர் நகராட்சி பகுதிக்கு ரூ.68.40 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமை அடையாமல் உள்ளதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பணியை துரிதப்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் குடிநீர் இணைப்பு குழாய்களில் பொருத்தப் பட் டுள்ள மீட்டர் சீர்படுத்தப் பட்டு, தடையின்றி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். தாந்தோணி, வெங்கமேடு, காந்திகிராமம் மற்றும் கரூர் நகராட்சி பகுதிகளில் சாக்கடை தண்ணீர் தேங்காதவாறு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்