கூட்ட நெரிசலை தவிர்க்க ஏப்.6ந் தேதி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தகவல்

கூட்ட நெரிசலை தவிர்க்க, ஏப்.6ந் தேதி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-29 13:03 GMT
தூத்துக்குடி:
கூட்ட நெரிசலை தவிர்க்க, ஏப்.6ந் தேதி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
விழிப்புணர்வு குறும்படம்
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் வ.உ.சி. கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட குறுந்தகட்டினை வெளியிட்டார். 
பின்னர் அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை 2ஆக பிரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில், தற்போது 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 
இரவு 7 மணி வரை...
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஏப்.6ந் தேதி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடியில் பணியாற்ற 10,064 வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருவாய் துறை, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 8 ஆயிரம் நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக வாக்களிப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர், வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டரகள்் (பயிற்சி) பிரித்திவிராஜ், சதீஸ்குமார், வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்