தெற்கு உடைபிறப்பு ராமலிங்க அய்யன் சுவாமி கோவில் பங்குனி திருவிழா
தெற்கு உடைபிறப்பு ராமலிங்க அய்யன் சுவாமி கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தெற்கு உடை பிறப்பு ராமலிங்க அய்யன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு குலசேகரன்பட்டினம் சுவாமி சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் கடல் தீர்த்தம் எடுத்து, மேளதாளங்களுடன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. காலை 9 மணிக்கு ராமலிங்க அய்யன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, காலை 11 மணிக்கு கணியான் கூத்து, நண்பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் சுவாமிகள் அருள்வாக்கு கூறுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து கணியான் கூத்து நடனம், நடு இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமிக்கு படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது. மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திரு விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.