திருச்செங்கோட்டில் கட்டிட மேஸ்திரி தற்கொலை

திருச்செங்கோட்டில் கட்டிட மேஸ்திரி தற்கொலை;

Update: 2021-03-29 05:15 GMT
எலச்சிபாளையம், மார்ச்.29-
திருச்செங்கோடு சூரியம்பாளையம் அருகே ராஜாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த சில வாரங்களாக  இடுப்பு மற்றும் முழங்கால் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமசாமி அதிக அளவில் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ஈஸ்வரி, கணவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

மேலும் செய்திகள்