சேலத்தில் தங்கும் விடுதிகளில் செல்போன்கள் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்
2 teenagers caught stealing cell phones in hostels
சேலம்:
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது வெளியே சென்ற நேரத்தில் அவருடைய அறையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இதேபோல் வேறு ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த மகேஷ் பிராஜ்தார் (39) என்பவரது செல்போனும் திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த செல்போன்கள் திருட்டு தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராஜா (28), சிவா (24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.