தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி;
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் பனங்காட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி தங்கம்மாள் (வயது 60). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே உள்ள மகன் வீட்டிற்கு மாட்டு சாணம் எடுக்க சென்று விட்டு திரும்பி உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது தாரமங்கலம் பகுதியில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் தங்கம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஓமலூர் பச்சனம்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் சிவா என்பவர் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.