பங்குனி உத்திர திருவிழா: நெல்லை சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2021-03-28 21:53 GMT
நெல்லை, மார்ச்:
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். 

பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழாவில் அவரவர் குல தெய்வ கோவில்களில் சென்று வழிபடுவது வழக்கம். குலதெய்வங்களை வழிபடுவதால் நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண தடை நீங்கும் மனதில் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது இதையொட்டி சாஸ்தா கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புனித நீராடல்

நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோவிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் வரத்தொடங்கினர். அங்கு உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.  அதேபோல் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாஸ்தா கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி பஸ் நிலையங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்