ஏர்வாடி அருகே கள் விற்ற 2 பேர் கைது

ஏர்வாடி அருகே கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-28 21:38 GMT
ஏர்வாடி, மார்ச்:
ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீசார் கோதைசேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பனங்காட்டில் 2 பேர் மண் பானையில் கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். 
இதில் அவர்கள் சீலாத்திகுளம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 43), திருமலாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஐகோர்ட் துரை (25) என்பதும், 2 பேரும் அதிக போதைக்காக ஊமத்தங்காயை கள்ளுடன் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்