கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண விழா கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண விழா

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண விழா கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது

Update: 2021-03-28 21:30 GMT
அழகர்கோவில்
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண திருவிழா நேற்று நடந்தது. இதில் மேள தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி தேவியர்களுடன் பல்லக்கில் சென்று அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார், தொடர்ந்து பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருடன் கள்ளழகர் சுந்தரராச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தேவியர்களுடன் காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  மாலையில் சுவாமி சப்பரத்தில் புறப்பாடாகி சென்று கோவில் சன்னதியில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சிக்காக மண்டபம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று(திங்கட்கிழமை) 5-ம் திருநாள் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்