வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி

மண்டல அதிகாரிகள் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி நடந்தது

Update: 2021-03-28 21:26 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3,343 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல அதிகாரிகளின் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. இதன் மூலமாக அந்த வாகனங்களின் இயக்கத்தை திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க முடியும்.

மேலும் செய்திகள்