சைக்கிள் மீது பஸ் மோதியதில் முதியவர் சாவு
சைக்கிள் மீது பஸ் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.;
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராசு(வயது 60). இவர் அப்பகுதியில் மண்டையன்குறிச்சி சாலை அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தங்கராசு நேற்று வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பஸ் சாலையை கடந்து செல்ல முயன்ற தங்கராசுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கராசுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தங்கராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.