ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வைத்தனர்.

Update: 2021-03-28 20:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வைத்தனர். 
ஆண்டாள் கோவில் 
வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 
அதேபோல இந்த ஆண்டு திருக்கல்யாண விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும்  ஆண்டாள், ெரங்கமன்னார் வீதிஉலா நடைபெற்றது. 
திருக்கல்யாணம் 
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னார் கோவிலிலிருந்து புறப்பட்டு கீழ ரத வீதியில் உள்ள கோரதம் என அழைக்கப்படும் செப்பு தேரில் ஏறி நான்கு ரத வீதிகளில் பவனி வந்தனர். இதைதொடர்ந்து மாலை 3 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. 
 ஆண்டாள் மாட வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது. பின்னர் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன் ஆண்டாள், ரெங்கமன்னார்  இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 7.25 மணிக்்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் மதுரை சரக டி.ஐ.ஜி. சுதாகர், கலெக்டர் கண்ணன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பாதுகாப்பு பணி 
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகிேயார் செய்திருந்தனர். பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ்  சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்