சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுந்தரமகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தா்களின் வசதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.